2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கை-இந்திய மீனவர் குழு, ஜெயாவுடன் சந்திக்கக்கோரிக்கை

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாக்கு நீரிணையில் இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையில் நிலவிவரும் முரண்பாட்டு நிலைமை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு, தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவுடன் சந்திப்பொன்றை எதிர்பார்த்துள்ளனர்.

இந்திய - இலங்கை மீனவர்களின் நலன்பேணல் மன்றத்துக்கான ஆலோசகர் எஸ்.பி அந்தோனிமுத்து, தானும் இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் என். தேவதாஸும், தமிழ்நாட்டின் பிரதம செயலாளருக்கு இது குறித்து கடிதம் எழுதிக் கோரிக்கை விடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

நான்காம் சுற்றுப் பேச்சுக்களுக்கு முன்னதாக முதலமைச்சரைச் சந்திப்பதில் ஆர்வமாகவுள்ளதாகத் தெரிவித்த அவர், இரு நாடுகளையும் சேர்ந்த தலா ஐவரைக் கொண்ட 10 பேர் கொண்ட அணி ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இந்திய மீனவர்களையோ அல்லது தலைவர்களையோ சந்திப்பதற்கு முன்னதாக, இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்திக்க விரும்புவதாக, கிராமிய மீனவர் சங்கங்களின் யாழ். மாவட்ட சம்மேளனத்தின் தலைவர் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .