2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

George   / 2016 பெப்ரவரி 05 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே..ஜோர்ஜ்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் இன்று மாலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கை - இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், இலங்கைக்கு இன்று வெள்ளிக்கிழமை, விஜயம் செய்தார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டில் சுஷ்மா சுவ்ராஜ் மற்றும்  இலங்கை வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உட்டபட  இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாநாட்டின் முடிவில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ  உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் வடமாகாணத்தில் 27 பாடசாலைகளை மீள்புனரமைப்பு செய்தல் ஆகிய இரண்டு ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X