Thipaan / 2016 ஜனவரி 03 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக, நாடாளுன்ற உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
திலங்க சுமதிபால 88 வாக்குகளை பெற்றுள்ளதுடன் நிஷாந்த ரணதுங்க 56 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
உதவித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்களில், 102 வாக்குகளைப் பெற்ற ஜயந்த தர்மதாசவும் 90 வாக்குகளைப் பெற்ற கே. மதிவாணனும் வெற்றிபெற்றனர். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரும், 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவருமான அர்ஜுன ரணதுங்க, 80 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.
செயலாளராக மொஹான் டி சில்வாவும் உப செயலாளராக ரவின் விக்ரமரட்ணவும் தெரிவாகினர்.
115 வாக்குகளைப் பெற்ற ஷமி சில்வா, 28 வாக்குகளைப் பெற்ற ஈ. நாரங்கொடவைத்தோற்கடித்து பொருளாளராகத் தெரிவானார். உப பொருளாளரா லலித் ரம்புக்வெல்ல தெரிவானார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago