2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Thipaan   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவு ஜனாதிபதியைக் கொலைசெய்யும் சதியின் ஒரு பகுதியாக, இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட குறிபார்த்து சுடுபவரின் விளக்கமறியல், மேலும் 10 நாட்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

27 வயதான இந்நபர், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

ஆயினும், இலங்கையரைக் கூலிக்கு அமர்த்தியதாகக் கூறப்படும் மூவரும், போதிய சாட்சியமின்மையால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

உள்நாட்டு அமைச்சர் உமர் நசீர், குறிபார்த்துச் சுடுபவர் மீது பாரதூரமான வழக்கு உள்ளதென கூறினார். 'எப்படியாயினும், இது ஜனாதிபதி மீதான கொலை முயற்சி' என அவர் கூறினார்.

சிறு தீவொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், இந்த குறிபார்த்து சுடுபவர் கைதுசெய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X