Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 12 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதக் காலப்பகுதியில் மாத்திரம், எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 68 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'இதன்பிரகாரம், இலங்கையில், எயிட்ஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2,377ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது' என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் தெரிவித்தது.
இலங்கையில், எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகியிருந்த முதலாவது நோயாளி, 1986ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டார்.
நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்படும் இரத்தப் பரிசோதனைகளின் போதே, எச்.ஐ.வி நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதாகக் கூறிய மேற்படி அமைப்பு, இரத்தப் பரிசோதனையை அதிகரிக்கும் பட்சத்தில், நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரையும் கண்டுபிடித்துவிட முடியும் என்றும் கூறியது.
இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட எயிட்ஸ் நோயாளர்களில், ஆண்களே அதிகம் என்று தெரிவித்த மேற்படி அமைப்பின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஜீ.வீரசிங்க, ஆண் சம பாலுறவாளர்கள் காரணமாகவே, ஆண்களில் அதிகமானோருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான காரணிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
எவ்வாறாயினும், எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகியுள்ள நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை மிகவும் குறைந்த மட்டத்திலேயே இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
9 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Aug 2025