Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மே 08 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்தும் தமிழர்கள் மீதான சித்திரவதை தொடர்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை, ஏனைய வன்கொடுமை, மனிதாபிமானமற்ற தண்டனை சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் தெரிவித்தார்.
எட்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த அவர், கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருடன், நீதித்துறையின் சுதந்திரம் மீதான அறிக்கையாளர் மோனிகா பிண்டோவும் வருகைதந்திருந்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் (தமிழர்கள் மீதான) சித்திரவதை கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனாலும்கூட, சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாக இன்னும் சித்திரவதை தொடர்கிறது. மனித உரிமைகளை தூக்கி பிடிப்பதில், இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்த சாதகமான நடவடிக்கைகள், எங்களுக்கு (ஐ.நா. வுக்கு) ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.
இலங்கையில் உள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைகளில் நிலைமை, துயரம் அளிப்பதாக உள்ளது. வரலாற்றில் இலங்கை ஒரு முக்கியமான தருணத்தில் உள்ளது. சர்வதேச மனித உரிமைகளுக்கான கடப்பாடுகள் எல்லாம் முழுமையாக சீரமைக்கப்படும் வகையில், எதிர்காலத்துக்கான வழியை ஏற்படுத்துவதில் எங்கள் சிபாரிசுகள் தொடரும். இவ்வாறு கூறினார்.
இந்த குழுவினர் இலங்கை நிலவரம் குறித்து நேரில் கண்டு, ஆராய்ந்து இலங்கை அரசிடம் அறிக்கை அளிப்பர். அது தொடர்பான இலங்கை அரசின் பதிலைப் பெற்று, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் அளிப்பார்கள்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago