2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலஞ்ச விவகாரம்: வைத்தியருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2017 ஜூலை 10 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, குளியாப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணரையும் தனியார் வைத்தியசாலையின் கதிரியக்க தொழில்நுட்பவியலாளரையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், இன்று (10)உத்தரவிட்டது.

ஆய்வுகூடம் ஒன்றால் வழங்கப்பட்ட 75, 000 ரூபாய் பணத்தை ஊழியரொருவரூடாகப் பெற்றபோது, இலஞ்சம், ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், அந்த வைத்தியர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், தனியார் வைத்தியசாலையின் கதிரியக்க தொழில்நுட்பவியலாளரும் கைதுசெய்யப்பட்டு, இருவரும், குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தால், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .