Editorial / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாணம் உட்பட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், குறித்த பாடசாலைகளில் எவ்விதமான விளையாட்டுப் போட்டிகளுக்கும் இல்லப் போட்டிகளுக்கும் அனுமதி வழங்கப்படாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
'விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அது சார்ந்த விடயங்களுக்கு சுகாதார பிரிவால் பச்சை சமிக்ஞை காட்டப்பட்டால் மாத்திரமே, அனுமதி வழங்கப்படும்' என, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து, சுகாதாரப் பிரிவினருடன் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அவர், முன்பள்ளிகள் மற்றும் பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் என்பன, ஜனவரி 11ஆம் திகதியுடன் பிரதேச மட்டத்தில் திறக்கப்படும் என்றார்.
7 minute ago
14 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
27 minute ago
36 minute ago