Editorial / 2021 ஜனவரி 06 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா. நிரோஸ்
இந்த நாட்டில் நல்லிணக்கம் எங்கே இருக்கிறதெனக் கேள்வியெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இல்லாத ஒன்றுக்காக மாரடிக்க வேண்டாமென ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனிடம் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், நல்லாட்சியில் தான் வகித்த நல்லிணக்க அமைச்சை, இந்த அரசாங்கம் முற்றாகவே அழித்துவிட்டது என்றார்.
கனடா, ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தை, இலங்கையில், தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கிறதென ஆளும் கட்சியின் எம்.பியான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார் எனச் சுட்டிக்காட்டிய மனோ கணேசன், கனடா சட்டம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இந்தநாட்டில் எங்கே ஐயா, நல்லிணக்கம் இருக்கிறது என, சுரேன் ராகவனிடம் கேட்டார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' என உங்கள் அரசாங்கம் சொல்கிறது. ஆனால், சிறைத் தண்டனை கைதியான பெளத்த தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்புக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்க் கைதிகளுக்கு அது கிடைப்பதில்லை. சிங்களவருடன் சேர்ந்து இந்நாட்டில் வாழவே தமிழரும் முஸ்லிம்களும் விரும்புகின்றோம். ஆனால், உங்கள் சட்டம் சிங்களவருக்கு ஒன்று, தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் ஒன்றென அல்லவா இருக்கிறது? இதுவா தேசிய நல்லிணக்கம் எனக் கேள்வியெழுப்பிய மனோ கணேசன், இந்த அரசாங்கத்தில் இல்லாத ஒன்றுக்காக மாரடிக்க வேண்டாமென, சுரேன் ராகவனிடம் கேட்டுக்கொண்டார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026