2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

“இளைஞர் இயக்கமே அரசாங்கத்தின் முயற்சி“

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த இளைஞர் மாநாடு, இந்த நாட்டின் இளைஞர்களை அரசியல் கைப்பாவைகளாக மாறாது, நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் தலைவர்களாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைக் குறிக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டினேன் என  கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் செவ்வாய்க்கிழமை (12) காலை நடைபெற்ற “யூத் கிளப்” தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, தனது அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதில் பங்காளர்களாக அல்லாமல், இளைஞர்களுக்கு அவர்களின் சரியான இடத்தை வழங்குவதன் மூலம் தனது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கும் சக்தி கொண்ட ஓர் இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், எதிர்கால இளைஞர் தலைமுறை உலகத்தின் முன்னிலையில் நாட்டை வென்றெடுக்கும் மற்றும் மற்றவர்கள் மீது இரக்கம் காட்டும் ஒரு இளைஞர் தலைமுறையாக இருக்க வேண்டும் என்றும் நான் தெரிவித்தேன்.

இந்த நாட்டை ஒப்படைப்பதற்குத் தகுதியுள்ள அந்த இளைஞர் இயக்கத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் முயற்சி என்பதை நான் வலியுறுத்தினேன். இளைஞர்கள் இதற்குத் தேவையான தகைமைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன், மேலும் 2025 தேசிய இளைஞர் மாநாட்டிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .