2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இளநீரை பருகக் கொடுத்து தங்கம், பணம் கொள்ளை

Kanagaraj   / 2016 மே 05 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளநீருக்குள் போதைப்பொருளைக் கலந்துகொடுத்து, தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படும் இருவரைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக, பேராதனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பணமும் தங்கமும், சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கட்டுகஸ்தோட்டையை வசிப்பிடமாக கொண்ட இருவர், முருத்தலாவ பகுதிக்குச் செல்லவேண்டுமெனக்கோரி, லொறியொன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

அந்த லொறியில் செல்லும் போது, இடைநடுவில் சாரதிக்கு, இளநீரைப் பருகக்கொடுத்துள்ளனர். சாரதி மயக்கமடைந்ததன் பின்னர், சாரதி வசமிருந்த 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி, அவரிடமிருந்த 43,200 ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட
பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X