Freelancer / 2025 ஒக்டோபர் 07 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹூங்கம - வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே இதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்பதியினர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R
8 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago