2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இளைஞர் கடத்தல்; மூவர் கைது

Nirosh   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், மூவர் இன்று (21) பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 4ஆம் திகதி இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர்கள் மூவரும்  கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர், செல்லும் வழியில் தப்பித்து யட்டியாந்தொட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளாரென பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்காக இன்று பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X