Simrith / 2024 நவம்பர் 24 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

நவம்பர் 18 அன்று மினுவாங்கொடையில் பணமாற்று நிறுவனமொன்றுக்கு சொந்தமான வேனிலிருந்தவர்களை மிரட்டி சுமார் 75 மில்லியன் ரூபாவை அபகரித்து சென்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொள்ளையிட்ட பணத்துடன் தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களை கைது செய்ய கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
கட்டான மற்றும் உடுகம்பொல பிரதேசங்களைச் சேர்ந்த முறையே 37 மற்றும் 40 வயதுடைய இரு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சந்தேக நபர்களின் இருப்பிடம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை 071 – 8591608 அல்லது 071 – 8591610 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
5 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago