2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இவரை அடையாளம் தெரிந்தால் சொல்லுங்கள்

George   / 2016 நவம்பர் 27 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் போது வெளியான தகவலுக்கு அமைய சந்தேகநபரை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம், பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சந்தேகநபரின் உருவப்படம், குற்றப் அறிக்கைப் பிரிவு பொலிஸ் வரைபட கலைஞரின் ஊடாக வரையப்பட்டுள்ளது.

35 வயது மதிக்கத்தக்க இவர், 05 அடி 08 அங்குலம் உயரமானவர் என்றும் கண்கள் இரண்டும் பழுப்பு நிறத்திலும் தோல் மாநிறமாகவும் கொண்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள், 0112422176, 0112380380, 0718305528, 0718349505, 0773291500, 0718070207 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .