Freelancer / 2026 மார்ச் 18 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் ஈரான் ஆகியன இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளில் உள்ள பொருளாதார மற்றும் இராணுவ இலக்குகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், அபாய எச்சரிக்கை சத்தம் கேட்கும் சந்தர்ப்பங்களில் அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பான இடங்கள் இல்லாத பட்சத்தில், பலமான சுவர்களைக் கொண்ட இடங்களில் தஞ்சம் புகுவதும், கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களிலிருந்து தூர விலகி இருப்பதும் அவசியமானது எனவும் மேலதிகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானத்தின்படி, 2026 பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 21 வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்-நுழைவு விசாக்கள் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படும் என்பதுடன், இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விசா செல்லுபடியாகும் காலம் இஸ்ரேலின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரசபையின் அமைப்பில் தோன்றும் என்பதுடன், அந்த காலப்பகுதிக்குள் எல்லைகளின் ஊடாக மீண்டும் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R
16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago