Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டங்களுடன் ஒப்பிடுவது தவறானது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கிய போராட்டம். அதில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அந்த போராட்டத்தின் அடிப்படையில் ஒரு காரணம் இருந்தது” என பிரித்தானிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக தமிழ் மக்கள் தமது உரிமையைப் பெறுவதற்காக ஜனநாயக ரீதியாக, இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக ஒப்பந்தங்களின் மூலமாக, ஒத்துழைப்புக்களின் மூலமாக பல வகைகளில் அகிம்சை வழியாக போராடி, தமது உரிமைகளை பெறமுடியவில்லை. இந்நிலையில், தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்தப்பட்ட ஒரு சூழலில், இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இது ஒரு வேறு விதமான போராட்டம்.
அடிப்படைவாதிகளுடைய போராட்டம் என்பது தங்களுடைய சில நம்பிக்கைகளை தாங்கள் நிலை நாட்ட வேண்டும், எவ்விதத்திலாவது அதை நிலைநாட்ட வேண்டும் என்பதுடன் எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நியாயத்தின் அடிப்படையில், ஒரு நீதியின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டம் அல்ல. எனவே இரண்டையும் ஒருமித்து பார்க்க முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
27 Jun 2025
27 Jun 2025