Freelancer / 2026 மார்ச் 05 , பி.ப. 10:31 - 1 - {{hitsCtrl.values.hits}}
ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208 பணியாளர்களை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
இலங்கையின் நிலப்பரப்பு, கடல் எல்லைகள் மற்றும் வான்பரப்பு ஆகியவற்றை எந்தவொரு அரசும் மோதல்களின் போது ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்துவதற்கோ இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.
எந்தவொரு சர்வதேச மோதலிலும் எமது நிலைப்பாடு நடுநிலையானது. எமது நிலப்பரப்பு, கடல் எல்லைகள் அல்லது வான்பரப்பை எந்தவொரு நாட்டிற்கும் மோதல்களின் போது சார்பாகவோ அல்லது மற்றொரு நாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலோ பயன்படுத்த நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
அதுவே எமது நிலைப்பாடு. அதனால்தான் மோதல் ஆரம்பமான தருணத்திலிருந்தே நாம் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தும் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.
ஈரானின் இரண்டு கப்பல்கள் தொடர்பான பிரச்சினை எழுந்தபோதும் நாம் இந்த நடுநிலைமையையே கடைப்பிடித்து வருகிறோம்.
அதேநேரம், ஒரு தேசமாகவும் அரசாகவும் நடுநிலைமையைப் பாதுகாக்கும் அதேவேளை, மனிதநேயத்திற்கு நாம் முதலிடம் வழங்குகிறோம். எனவே, மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்கும், மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எதனையும் எடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம்.
ஒரு நாடு பின்பற்ற வேண்டிய மிகச் சிறந்த கொள்கை அதுவென்றே நான் கருதுகிறேன். அந்தக் கொள்கையிலிருந்தே நாம் செயற்படுகிறோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். R
11 minute ago
26 minute ago
32 minute ago
35 minute ago
வாஜ்பாய் Friday, 06 March 2026 06:29 AM
அது சரி , நிங்கள் சொல்வது எல்லாம் சரி, எங்கே நாட்டின் இறையாண்மை? எங்கே சர்வதேச சட்டம். ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
32 minute ago
35 minute ago