Freelancer / 2026 மே 21 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் நேற்று புதன்கிழமை பேசிய அவர், ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு, அவர் நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்று பதிலளித்தார்.
மேலும் நெதன்யாகு இஸ்ரேலில் சரியாக நடத்தப்படவில்லை என்றும், தமக்கான ஆதரவு இஸ்ரேலில் 99 சதவீதமாக உள்ளதால், அதிபர் பதவிக்குப் பிறகு தாம் இஸ்ரேல் பிரதமராகப் போட்டியிடலாம் என்றும் ட்ரம்ப் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
ஈரான் உடனான இந்த மோதல் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று மீண்டும் உறுதியளித்த ட்ரம்ப், பேச்சுக்கள் தாமதமாவது குறித்த கேள்விக்கு அமெரிக்கா வியட்நாமில் 19 ஆண்டுகளும், ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. ஆனால் நான் இந்த விவகாரத்தில் இறங்கி 3 மாதங்கள்தான் ஆகிறது.
அதிலும் பெரும்பாலான நாட்கள் போர்நிறுத்தத்தில்தான் கழிந்துள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரே ஒரு இறுதி வாய்ப்பை வழங்குகிறோம், இதில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. ஒட்டுமொத்தமாகப் பல உயிரிழப்புகள் ஏற்படுவதை விட, குறைந்த அளவிலான இழப்புகளுடன் இதை முடிப்பதே என் இலக்கு என்று அவர் கூறினார். (a)
38 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago