2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

உட்கட்சி மோதல்; ரணில் - கரு இன்றும் பேச்சு

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில், இன்று (06) மாலை, விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பணிகளை, கரு ஜயசூரியவிடம் ஒப்படைப்பதற்கு, ஐ.தே.க தலைவர் தீர்மானித்துள்ள நிலையில், இது பற்றிப் பேசுவதற்காகவே, இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், ரணில் ஸ்ரீ சஜித் இரு தரப்பினரும் இணைந்துப் பயணிப்பதாயின் மாத்திரமே, தான் பொதுத் தேர்தலுக்குத் தலைமை தாங்குவதாக, கரு ஜயசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .