2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

சமிக்ஞையை மீறிச் சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு

Freelancer   / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, வெல்லமடம பகுதியில் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பொலிஸார் காரை நிறுத்துமாறு கூறிய போதும், மீறிச் சென்றதால் பொலிஸார் துப்பாக்கிப் பிரேயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து குறித்த கார், மாத்தறை, ஜனராஜ மாவத்தை பகுதியில்  கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த காரில் பயணித்தவ இருவரும் தப்பிச் சென்ற நிலையில் வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X