Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை பாரீஸில் தரையில் தூங்க வைத்திருக்கிறார் பாலிவுட் நடிகர் வருண் தவான். ஏம்பா பொம்பள புள்ளய இப்படியா தரையில் படுக்க வைப்பது என்று கேட்டால் காரணம் சொல்கிறார்.
பாலிவுட் நடிகர் வருண் தவானும், நடிகை ஜான்வி கபூரும் முதல் முறையாக சேர்ந்து நடித்த படம் பவால். அந்த படத்தில் கணவன், மனைவியாக நடித்தபோது அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். இதையடுத்தே அக்டோபர் 2ம் திகதி திரைக்கு வந்த Sunny Sanskari Ki Tulsi Kumari படத்திலும் சேர்ந்து நடித்தார்கள்.
அந்த படத்தை விளம்பரம் செய்தபோது வருண் தவானும் சரி, ஜான்வி கபூரும் சரி பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டனர். அப்படித் தான் ஜான்வி கபூர் தரையில் படுத்து தூங்கியது தெரிய வந்தது. என்னை தரையில் தூங்கவிட்டார் வருண் தவான் என்று ஜான்வி கூறியதை கேட்ட அவர் தெரிவித்ததாவது,
பவால் ஷூட்டிங்கிற்காக பாரீஸ் சென்றபோது ஒரு லவுஞ்சில் தங்கினோம். அங்கு சோபாவில் படுத்து தூங்கலாம் என்று பார்த்தால் இடம் இல்லை. வேறு யாரோ தூங்கிக் கொண்டிருந்தார்கள். இதையடுத்தே நானும், ஜான்வியும் தரையில் படுத்து தூங்கினோம். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்தபோது சோபாவில் தூங்கியவர்கள் அங்கு இல்லை. உடனே நான் சோபாவில் படுத்துக் கொண்டேன். ஜான்வி கபூர் தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை எழுப்பவில்லை என்றார்.
சோபாவில் இடம் இருக்கு வானு ஏன் என்னை எழுப்பவில்லை என்று ஜான்வி கபூர் கேட்டார். அதற்கு வருண் தவானோ, நான் எழுப்பியிருந்தால் தூக்கத்தை ஏன் கெடுத்தனு கேட்பார். அதனால் எழுப்பவில்லை என்றார்.
சோபா விஷயத்திற்கு பழி வாங்க விமானத்தில் பயணம் செய்தபோது எனக்கு ஏதோ டிரக் கொடுத்துவிட்டார் ஜான்வி கபூர் என்று தெரிவித்தார் வருண் தவான். நான் அவருக்கு டிரக் எல்லாம் கொடுக்கவில்லை. வருணுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது அதனால் தூக்க மாத்திரைகள் தான் கொடுத்தேன் என்றார் ஜான்வி கபூர்.
முன்னதாக பவால் படத்தில் மனைவி மீது விருப்பம் இல்லாத கணவராக வருண் தவான் நடிக்க வேண்டியது இருந்தது. ஆனால் ஜான்வியை சந்தித்து பேசியதுமே இவர் நமக்கு நெருக்கமான தோழியாகிவிடுவார் என்று வருண் தவானுக்கு தோன்றியிருக்கிறது. இதையடுத்தே ஷூட்டிங்ஸ்பாட்டில் ஜான்வி கபூரை பார்த்தாலும் பார்க்காத மாதிரி பேசாமல் இருந்திருக்கிறார் வருண்.
ஜான்வியிடம் பேசாமல் இருந்தால் தான் நெருக்கமில்லாத கணவன், மனைவியாக நடிக்கும்போது நன்றாக இருக்கும் என்று நினைத்து அப்படி செய்தாராம். ஆனால் இது தெரியாத ஜான்வியோ வருண் ஏன் தன்னிடம் பேசாமல் இருக்கிறார் என்று குழம்பியிருக்கிறார்.
இதற்கிடையே வருண் தவானின் எனர்ஜி தன் அம்மா ஸ்ரீதேவியை வியக்க வைத்தது என்றார் ஜான்வி கபூர். தான் ஜுத்வா 2 படத்தில் நடிக்க ஸ்ரீதேவி இரண்டு வேடங்களில் நடித்த சால்பாஸ் படத்தை பலமுறை பார்த்ததாக கூறினார் வருண் தவான். ஜுத்வா 2 படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க அது மிகவும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago