Freelancer / 2023 மே 26 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்கம் மற்றும் அலைபேசிகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த குற்றத்தை அலி சப்ரி ரஹீம் எம்.பி. ஏற்றுக்கொண்டதாலேயே அவருக்கு 75 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அரசு அவருக்கு உதவவில்லை அதனால் அரசுக்கு எதிராக வாக்களிக்கின்றேன் என அவர் கூறியதையிட்டு அரசென்ற வகையில் நாம் பெருமையடைகின்றோம் என பதில் நிதி அமைச்சரான ரஞ்சித் சியம்பபாபிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்துகை தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பேசுகையிலேயே இவ்வாறுத்தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
3.5 கிலோ தங்கம் மற்றும் 96 தொலைபேசிகளை சட்ட விரோதமாக கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொண்டுவந்த குற்றத்தை அலி சப்ரி ரஹீம் எம்.பி. ஏற்றுக்கொண்டார். அதனால்தான் அவருக்கு 75 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
தங்கத்தை கடத்தி வந்த அலி சப்ரி ரஹீம் எம்.பி.யை எவ்வாறு உடனடியாக விடுவித்தனர் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அவரது குற்றத்துக்கு விதிக்கப்பட்ட 75 இலட்சம் ரூபா தண்டத்தை அவர் 24 மணி நேரத்துனுள் செலுத்தினார். அதனால் உடனடியாகவே நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
அரசு அவருக்கு உதவவில்லை அதனால் அரசுக்கு எதிராக வாக்களிக்கின்றேன் என அவர் கூறியதையிட்டு அரசென்ற வகையில் நாம் பெருமையடைகின்றோம். இதுதான் ''சிஸ்டம் சேஞ்'' .அவரின் இந்த குற்றச்சாட்டு ஜனாதிபதிக்கும் அரசுக்கும் கிடைத்த வெற்றி என்றார்.
28 minute ago
49 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
49 minute ago
56 minute ago