2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

உயர் இரத்த அழுத்தத்தால் மரணங்கள் அதிகரிப்பு

S.Renuka   / 2025 மே 14 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஏற்படும் மொத்த இறப்புகளில் சுமார் 70% உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் சிக்கல்களுடன் தொடர்புடையவை என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் (NCD) பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 34.8% பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றா நோய்கள் பிரிவின் ஆலோசகர் டாக்டர் சமிந்தி சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

கவலையளிக்கும் விதமாக, கண்டறியப்பட்டவர்களில் 64% பேர் எந்த வகையான மருந்துகளையும் எடுத்துக்கொள்வதில்லை என்றும் பெரும்பாலும், ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பெரும்பாலும், முதல் அறிகுறி பக்கவாதம். சில நேரங்களில், இது மாரடைப்பாகத் தோன்றும்.

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் டாக்டர் சமரக்கோன் விளக்கியுள்ளார்.

அத்துடன், தொற்றா நோய்கள் குறித்து ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு கணக்கெடுப்பை நாங்கள் செய்கிறோம் என்றார்.

2021 கணக்கெடுப்பு தரவுகளின்படி, நாட்டில் சுமார் 70% இறப்புகள் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான நிலைமைகளால் ஏற்படுகின்றன. 

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் 18% பேர் மட்டுமே தங்கள் நிலை குறித்து அறிந்திருந்தனர்.

கண்டறியப்பட்ட நோயாளிகளில் 54.7% பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். கவலையளிக்கும் விதமாக, கண்டறியப்பட்டவர்களில் 14% பேர் மட்டுமே தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தனர், இது மிகவும் கடுமையான சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறது.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தடுப்பு மற்றும் வருடாந்திர பரிசோதனைகள் ஆரம்பகால கண்டறிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 'சுவாதிவி'  (Suwadivi) மருத்துவமனைகள் இருந்தாலும், நோயாளிகளின் வருகை மிகக் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டார்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறிப்பாக, ஆண்களிடையே எடுத்துரைத்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X