2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ரணில் ஏன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்?

Freelancer   / 2025 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகரித்த சர்க்கரை அளவு காரணமாக வைத்திய  ஆலோசனையின் பேரில் நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியலைத் தொடர்ந்து, நேற்று (22) இரவு பல அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்குச் சென்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க மற்றும் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ஆதரவாளர்கள் குழுவுடன் சிறைச்சாலைக்கு வந்தனர்.

இருப்பினும், அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை, பின்னர் வெளியே காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X