2025 மே 22, வியாழக்கிழமை

உயர்தர பெறுபேறுகள் நாளை வெளிவரும்?

Thipaan   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், நாளை வியாழக்கிழமை வெளியிடப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரீட்சைத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும். அத்துடன், கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு, பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் அதே தினத்தில் காலையில் பரீட்சைகள் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்படும்.

இம்முறை உயர்தர பரீட்சைக்கு சுமார் 309,069 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன் அவர்களில் 236,072 பேர், பாடசாலைப் பரீட்சார்த்திகள் என்பதுடன் 72,997 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆவர்.

நாடுபூராகவும் 2,180 பரீட்சை மத்திய நிலையங்களிலும் 303 இணைப்பு மத்திய நிலையங்களும் இந்தப் பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X