2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

உயிரிழந்தவருடன் தொடர்பிலிருந்த 300 பேர் தனிமைப்படுத்தல்

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று (01) உயிரிழந்த நபருடன் தொடர்பைப் பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, சுமார் 300 பேர் புனாணை தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸ் என்பவர் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி, மரணமடைந்த மூன்றாவது நபராவார்.

அவரது சடலம் இன்று (02), முல்லேரிய பகுதியிலுள்ள கொட்டிகாவத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .