Editorial / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்மீது எவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் உயிரை உயிரை பணயம் வைத்தாவது நாட்டை பாதுகாக்க தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இராணுவம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து எதிர்காலத்தில் புலனாய்வு துறையை வலுப்படுத்தி நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக்காலத்தின்போது தனக்கு வழங்கிய கடமைகளை நாட்டுக்காக சரியான முறையில் நிறைவேற்றியதாக தெரிவித்த இராணுவ தளபதி, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தன்னை இராணுவ தளபதியாக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றிகளையும் கூறிக்கொண்டார்.
13 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago