2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

உறங்கிய சகோதரிகளில் ஒருவர் படுகொலை

Janu   / 2024 ஜூன் 11 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் மாத்திரமே வீட்டில் தங்கியிருந்த நிலையில் முகத்தை மூடிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர் , வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த  சகோதரிகளில் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம்  செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக  ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

ஹொரண மீவனபலான சிரில்டன் தோட்டத்தை சேர்ந்த 58 வயதுடைய   பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பங்களாதேஷ் பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டவர் எனவும் அவர் அந்த நாட்டில் வசிக்கும் நிலையில்,  பெண் தனது தங்கையுடன் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட  பெண்ணின் சகோதரி, மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த வீட்டில் தங்குவதற்காக வந்துள்ளதுடன் இருவரும் வெவ்வேறு அறைகளில் உறங்கச் சென்ற பின்னரே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .