2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

உறவுக்கு மறுத்த காதலியை கொன்று காதலன் செய்த செயல்

S.Renuka   / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடி​யிருப்பு ஒன்றில் துர்​நாற்​றம் வீசுவ​தாக கடந்த ஜனவரி 13ஆம் திகதி பொலிஸாருக்கு புகார் வந்​தது. சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று கதவை உடைத்​துப் பார்த்​த​போது, அங்கு 24 வயது மதிக்​கத்​தக்க பெண்​ணின் சடலம் கண்​டெடுக்​கப்​பட்​டது. 

பொலிஸார் விசா​ரணை நடத்​தி​ய​போது, அந்த வீடு மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரின் துவாரகபுரி பகு​தியைச் சேர்ந்த எம்​பிஏ மாணவர் பியூஷ் தம்​னோட்​டியா என்​பவருக்​குச் சொந்​த​மானது என்​பது தெரிய​வந்​தது.

தலைமறை​வாக இருந்த பியூஷை பொலிஸார் கைது செய்​துள்​ளனர். இதுகுறித்து இந்​தூர் பொலிஸ் துணை கமிஷனர் கிருஷ்ணாலால் சாந்​தினி கூறிய​தாவது, பெண்​ணின் சடலம் கண்​டெடுக்​கப்​பட்ட வீட்​டின் அருகே கிடைத்த சிசிரிவி கேமரா பதிவு​களின் மூலம் அப்பெண்ணை பியூஷ் தனது வீட்டுக்கு அழைத்து வந்தது தெரிய​வந்​தது.

அவரது தொலைபேசி எண்ணை வைத்து அவரை மகா​ராஷ்டி​ரா​வில் கைது செய்​தோம். அவரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி 3 நாள் பொலிஸ் காவலில் எடுத்து விசா​ரித்​தோம். கடந்த ஜனவரி மாதம், அந்தப் பெண்ணை வீட்​டுக்கு அழைத்து வந்து பியூஷ் பேசிக் கொண்​டிருந்​த​போது அவர்​களுக்​குள் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, பியூஷ், பெண்​ணின் கழுத்தை கயிற்​றால் நெரித்து கொலை செய்​துள்​ளார். பின்​னர் அங்​கிருந்து மும்​பைக்கு அரு​கிலுள்ள பன்​வலுக்​குச் சென்​றுள்​ளார். அங்கு ஒரு ஹோட்​டலில் இரவு தங்கி மாந்​தீரிக சடங்​கு​களை செய்து அந்​தப் பெண்​ணின் ஆவியைத் திரும்ப அழைத்து பேச முயற்​சித்​துள்​ளார். அந்​தப் பெண்​ணின் செல்​போனை​யும் உடைத்து அழித்​து​விட்​டார்.

அந்​தப் பெண் மற்ற ஆண்​களு​டன் பேசி​ய​தால் எழுந்த சந்​தேகம் காரண​மாக இந்த கொலை நடந்​துள்​ள​தாகத் தெரி​கிறது. கொலை நடந்த தினத்​தில் உடலுறவுக்கு அந்தப் பெண்ணை அழைத்​துள்​ளார்.

ஆனால், அவர் மறுக்​கவே, உனக்கு திடீர் பரிசு தரு​கிறேன் என்று பெண்​ணின் கண்ணை கட்​டி​விட்டு பின்​னர் கொலை செய்​துள்​ளார். பின்​னர் உயிரற்ற சடலத்​துடன் அவர் உடலுறவு கொண்​ட​தாகத் தெரி​கிறது. இவ்​வாறு கிருஷ்ணாலால்​ சாந்​தினி தெரி​வித்​தார்​.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .