Janu / 2026 மே 13 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர்க்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட தரப்பினருக்குமிடையிலான சந்திப்பு புதன்கிழமை (13) கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரீஸா சரூக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொருளாளருமான கலாநிதி ரூமி ஹாசிம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
புதிய உயர்ஸ்தானிகருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையே தசாப்த காலங்களாக நிலவிவரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது, இருதரப்பு உறவுகளை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வது மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினர்.
இலங்கை சந்தித்த ஒவ்வொரு நெருக்கடியான காலகட்டத்திலும் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் வழங்கி வந்த தொடர்ச்சியான ஆதரவுகளுக்கும், உலக அமைதிக்காகப் பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் மத்தியஸ்த முயற்சிகளுக்கும் இதன்போது பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

38 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago