2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

குறைந்து வருகிறது உலை எண்ணெய்

Freelancer   / 2022 ஜூலை 02 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான உலை எண்ணெய் குறைவடைந்து செல்வதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் ஒன்றிணைந்த வலையத்தில், நாளொன்றுக்கு அவசியமான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் 2 மின் பிறப்பாக்கிகளுக்கும், 4 நாட்களுக்கு மாத்திரமே உலை எண்ணெய் போதமானதாக உள்ளது.

அத்துடன், மேற்கு முனைய மின் உற்பத்தி நிலையத்துக்கு 2 நாட்களுக்கு அவசியமான உலை எண்ணெய்யே கையிருப்பில் உள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X