2025 நவம்பர் 19, புதன்கிழமை

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

R.Tharaniya   / 2025 நவம்பர் 19 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லதரங்கட்டுவ – பன்குலாவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சோதனை திங்கட்கிழமை (17) அன்று மாலை மேற்கொள்ளப்பட்டது.  53 வயதுடைய சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சந்தேக நபர் துப்பாக்கியை வைத்திருந்ததற்காக காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரும் துப்பாக்கியும் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளன.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.யூ.எம்.சனூன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X