2025 மே 22, வியாழக்கிழமை

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் ஜூனில் நடக்கும்: அரசாங்கம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருப்பு வாக்கு முறை இல்லாத, தொகுதிவாரி மற்றும் விகிதாரசாரம் ஆகிய இரண்டு முறைமைகளும் கலந்த புதிய முறைமையின் கீழ், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய விசேட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. விருப்பு வாக்கு முறைமையன்றி புதிய முறைமையின் கீழே, இத்தேர்தல் இடம்பெறும்.

மாகாண சபைகள் மற்றும் பொதுத்தேர்தலும், விருப்பு வாக்குகளற்ற புதிய முறைமையின் கீழேயே இடம்பெறும் என்று தெரிவித்த அவர், சில வருடங்களுக்குள் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று நல்லாட்சி அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X