Nirosh / 2021 மே 28 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மஹேஸ் கீர்த்திரத்ன)
தமக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு, விடுமுறைக்காக இலங்கை வந்துள்ள கப்பல் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுமுறைக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள இலங்கையைச் சேர்ந்த குறித்த அதிகாரிகள்,தமது விடுமுறை காலம் நிறைவடைந்து மீண்டும் பணிகளுக்குச் செல்ல முடியாது இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கப்பல் பணிக்காக மீண்டும் செல்ல வேண்டுமாயின் கொரோனா தடுப்பூசி ஏற்றியிருப்பது அவசியம் என, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த தடுப்பூசி விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதுவரை தமக்கு தடுப்பூசி ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2 minute ago
13 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
23 minute ago
30 minute ago