2026 மார்ச் 18, புதன்கிழமை

எச்சரித்த ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்

Editorial   / 2023 மே 24 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை எச்சரித்ததையடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள், ஒழுக்காற்று ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம், புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தளம் திலடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்விப்பயிலும் மாணவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  புத்தளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒழுக்கத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் எச்.எம்.அஸ்கியின் வீட்டுக்குள் புகுந்தே ஆசிரியரை மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குழுவினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X