Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் மீது மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கடை முதலாளி ஒருவர் முகக்கவசம் அணியாது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்ட போது அவரை முககவசம் அணியுமாறு எச்சரித்த பொது சுகாதார பரிசோதகர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாழைச்சேனை, விபுலானந்தர் வீதியில் சில்லறை கடை ஒன்றை நடாத்திவரும் கடை முதலாளி சம்பவதினமான நேற்று சனிக்கிழமை காலையில் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்நிலையில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் அங்கு சென்று, முகக்கவசம் அணியாது வியாபாரம் செய்யவேண்டாம் என்றும் முகக்கவசம் அணிந்து வியாபாரத்தில் ஈடுபடுமாறு கடை முதலாளியை எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த முதலாளி கடையின் முன்பு இருந்த மண்வெட்டியால் பரிசோதகர் மீது தாக்குதலை நடாத்தியதையடுத்து படுகாயமடைந்த அவர், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago