2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

எச்ஐவி தொற்றுக்குள்ளான தாய்லாந்து பெண்களுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றவிளைப்பின் போது அடையாளம் காணப்பட்ட விபசார விடுதியிலிருந்த இரண்டு தாய்லாந்து பெண்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இருவருக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகளின் மூலம் தெரியவந்ததையடுத்தே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தையில், மாசஜ் நிலையம் என்ற போர்வையில் இடம்பெற்ற விபசார விடுதியை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸார் முற்றுகையிட்டிருந்தனர். இதன்போது, இரண்டு தாய்லாந்து பெண்களும் உள்ளூரைச் சேர்ந்தை 7 பெண்களும் குறித்த விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, விடுதியின் முகாமையாளருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்த நீதவான், அவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்வதற்கு அனுமதியளித்தார்.

மேலும் கைது செய்யப்பட்டிருந்த உள்ளூரைச் சேர்ந்த 7 பெண்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். எனினும், தாய்லாந்து பெண்கள் இருவரையும் மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனைகளில் குறித்த இரண்டு பெண்களுக்கும் எச்ஐவி தொற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததையடுத்து அவ்விருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X