Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களிடையே மோதல் உருவெடுத்துள்ளதென்றும் அவர்கள் ஒரே நோக்குடன் செயற்படுவதில்லை எனவும் பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு, ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தனது முகநூலில் பதிலுரைத்துள்ளார்.
அதில், “எமது ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், கலந்துரையாடல்களில் இவ்வாறு பல்வேறு கருத்துகளை முன்வைப்பர். எனினும், ஜனநாயகம் குறித்துக் கலந்துரையாடியே ஒருமித்த முடிவுக்கு வருவோம். மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதே, ஒரே இலக்கு” என அவர் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் கூறியுள்ள அவர், “ஆணைக்குழு உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் இருப்பது உண்மையா என, ஊடகவியலாளர்களும் அரசியல் சார்ந்தோரும் தன்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறான கருத்துகள், ஆணைக்குழு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யும். எனவே, இது குறித்து நான் சில விடயங்களைக் கூற விருப்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“மூன்று பேர் ஒரே கருத்தைக் கொண்டிருந்தால், மூன்று பேரைக் கொண்ட ஆணைக்குழு எதற்கு? அது அவசியமற்றது. அவ்வாறாயின், இந்தியாவில் இருந்தது போன்று தனி நபரைக் கொண்ட ஆணைக்குழுவும் பழைய முறையில் தேர்தல் திணைக்களமும் இருக்க வேண்டும்” என, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago