Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Simrith / 2025 ஜூன் 16 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய வாகன உரிமையாளர்களுக்கு எண் தகடுகளை வழங்குவதில் இரண்டு மாத கால தாமதம் ஏற்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.
புதிய விநியோகத்தரிடம் எண் தகடுகளுக்கான கொள்முதல் கோரிக்கையை DMT சமர்ப்பித்ததால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்குள் இந்த செயல்முறை நிறைவடையும் என்றும், அதன் பிறகு எண் தகடுகள் வழங்கல் மீண்டும் தொடங்கும் என்றும் டிஎம்டி ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.
அதுவரை, புதிய வாகன உரிமையாளர்களின் பதிவு விவரங்களை உறுதிப்படுத்தும் அச்சிடப்பட்ட காகித எண் தகடுகள் மற்றும் DMTயின் கடிதத்தை DMT வழங்கும் என்றும், இந்த நடவடிக்கை குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
டிஎம்டியின் உத்தியோப்பூர்வ விநியோகத்தர் ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்பிய பிறகு அதன் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதால், இலக்கத் தகடுகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மெதுவாக நடப்பதாகக் கூறிய கமல் அமரசிங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவுடனான சமீபத்திய கூட்டம், சம்பந்தப்பட்ட தரப்பினர் வராததால் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago