2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கிறாரா சஜித்?

Nirosh   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

சபை நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியினர் புறக்கணித்துவரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிப்போகும் என்கிற அச்சத்தால், சபை நடவடிக்கைகளில் சஜித் பிரேமதாஸ விரைவில் கலந்துகொள்வார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். 

பாராளுமன்றத்தின் இன்றைய (07) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜோன்ஸ்டன், ஐக்கிய மக்கள் சக்தி சபை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ள நிலையில், சபைக்கு ரணில் வந்திருப்பதால் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மிகுந்த அச்சத்தில் உள்ளதாக அக்கட்சியின் எம்.பி ஒருவர் என்னிடம் தொலைபேசியில் கூறினார் என்றார்.

மேலும் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிப்போகும் என்கிற அச்சத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, சபை நடவடிக்கைகளில் விரைவாக கலந்துகொள்வார் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X