Freelancer / 2022 ஜனவரி 30 , பி.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என சில குழுக்கள் தவறான கருத்தை பரப்ப முயற்சிப்பதாகத் தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நாட்டில் அவ்வாறான உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்பதை நான் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நேற்று (29) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என இரசாயன உர நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரான பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அவ்வாறான உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்பதை நான் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்றைய சமூக ஊடகங்களைப் பார்க்கும் போது, உலகிலேயே கொரோனா வைரஸ் பரவியுள்ள ஒரே நாடு இலங்கைதான் என்று தோன்றுகிறது. உலகின் ஏனைய நாடுகளில் கொரோனா நோயாளிகள் இல்லை என்பது போல் அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நாட்டிலுள்ள 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100% பேர் முதல் தடுப்பூசியையும் 85% பேர் இரண்டாவது தடுப்பூசியையும் 55 ,லட்சம் பேர் மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் இன்னும் சில நாட்களில் மூன்று தடுப்பூசிகளையும் 85% மக்களுக்கு வழங்கிய உலகின் ஒரே நாடாக இலங்கை மாறும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்னும் சில மாதங்களில் பொருட்களின் விலையை குறைப்பதன் மூலம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் எனவும் உணவுக்கு பஞ்சம் இருக்காது எனவும் குறிப்பிட்டார்.
இந்நாட்டு மக்கள் கடந்த பருவத்தில் அறுவடை செய்த நெல்லை மட்டுமே உண்கின்றனர் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
24 minute ago
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
24 minute ago
2 hours ago