2025 மே 17, சனிக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர் வேண்டும்: த.தே.கூ தீர்மானம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 01 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இரா. சம்பந்தன்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.  

நேற்றைய கூட்டத்தில் பின்வரும் நியமனங்களும் நிறைவேற்றப்பட்டன.


கட்சியின் கொறடா  - தர்மலிங்கம் சித்தார்த்தன்.  (பா.உ)
நாடாளுமன்ற குழுச் செயலாளர் - சிவஞானம் சிறீதரன் (பா.உ)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் - ம. ஆ. சுமந்திரன் (பா.உ)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .