2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’எந்தவொரு தரப்பினருடனும் ம.வி.மு கூட்டணி அமைக்காது’

Editorial   / 2019 ஜனவரி 27 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு தரப்பினருடனும் மக்கள் விடுதலை முன்னணி கூட்டணி அமைக்காது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் வந்து இணையுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் வந்து இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்றைய தினம் அழைப்பு விடுத்தாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இதுவரை அவ்வாறான உத்தியோகப்பூர்வ அழைப்புகள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அமைச்சுப் பதவிகள் தேவையென்றால் தான் நாங்கள் போய் அவர்களுடன் இணையலாம். ஆனால் எமக்கு சீரழிந்துள்ள பொருளாதாரத்தை சீராக்க வேண்டும். புதிய கொள்கைகளுடன் கூடிய மாற்று வேலைத்திட்டத்துக்காக புதிய கூட்டணி அமைக்கப்பட வேண்டும். எனினும் மஹிந்த தலைமையிலான கட்சியுடனோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கட்சிக்கோ புதிய கொள்கைகளோ, மாற்றுத்திட்டங்களோ இல்லை எனவே அவர்களுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .