2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

”எந்தவொரு மாணவரும் பாடசாலையிலிருந்து இடைவிலக கூடாது”

Simrith   / 2025 ஜூலை 24 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு மாணவரும் பாடசாலை முறையை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லாத 13 வருட தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்வதற்கு கல்வி சீர்திருத்தம் தேவை என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்.

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், புதிய கல்வி சீர்திருத்தங்களில் 13 ஆண்டு தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்வதற்கான சீர்திருத்தங்கள் அடங்கும் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒரு பிள்ளை தொடர்ந்து மூன்று நாட்கள் பாடசாலைக்கு வரவில்லை என்றால், ஒரு அரச அதிகாரி பிள்ளை சமூகமளிக்காமை குறித்து தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X