2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘எனது நிலைப்பாட்டில் நான் உறுதி’

Nirosh   / 2019 ஜனவரி 07 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தான் தெரிவித்திருக்கும் கருத்துத் தவறாக இருந்தாலும்,

அதே நிலைப்பாட்டில் தான் தொடர்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன, சர்வதேச பாடசாலைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை மேற்பார்வை செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார். 

புஞ்சி பொரளையில் உள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அண்மையில் நான் தெரிவித்திருந்த கருத்துக்கு கல்வி அமைச்சரால் என்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்று தெரிவித்த அவர், ​ முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெருமவும் சண்டையிட்டுக்கொள்வதைப்போல, கல்வி அமைச்சருடன் நான் சண்டையிட்டுக்கொள்ளப்போவதில்லை என்றார். 

அரசாங்கப் பாடசாலை மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளே முதலிடம் பெறவேண்டும். சர்வதேச பாடசாலை மாணவர்களின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுடன், அரசாங்கப் பாடசாலை மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை ஒன்றிணைத்து வெளியிடக்கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .