2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

என்.பீ.டி சட்டமூலம் இயைபானது

Niroshini   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி (என்.பீ.டி), அரசியலமைப்புக்கு உட்பட்டதென உயர்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று வியாழக்கிழமை (22), நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி திருத்தச் சட்டமூலம், அரசியலமைப்பின் சில பிரிவுகளுக்கு முரணாக இருப்பதால், அது மக்கள் கருத்தறிவதற்கு விடப்பட வேண்டும் அல்லது நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறி, சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்புஇ நீதிமன்றத்தால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு தொடர்பில், அவையில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து, சபாநாயகர் அறிவித்தார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரியாக 2 சதவீதத்தை அறவிட அரசாங்கம் தீர்மானத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .