ஆர்.மகேஸ்வரி / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்தில் சந்தேகநபர்களாக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ ஆகியோரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 27 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
9 hours ago
02 May 2026