2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

எம்.பிக்களுக்கு நிவாரணம்

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகனத்தை பெற்றுக் கொள்வதற்காக சில நிவாரணங்களை வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

தீர்வையற்ற வாகன வழங்குதல், 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக இரத்துச் செய்யப்பட்டது. எனினும், இந்த நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என்று நாடாளுமன்ற நடவடிக்கை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி, அரச வைத்தியர்கள் மற்றும் உயர்மட்ட அரச உத்தியோகஸ்தர்கள் ஆகியோருக்கும், இந்த வரப்பிரசாதங்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அத்தரப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .