2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

எம்பிலிபிட்டிய ஏ.எஸ்.பி.க்கு பிணை

Menaka Mookandi   / 2016 ஜூன் 02 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிபிட்டிய நகரில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின் போது, பொலிஸாருக்கும் பொதுமக்கள் சிலருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கைகலப்பில், சுமித் பிரசன்ன ஜயவர்தன என்ற குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த தர்மரத்ன, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

20 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில், அவரை விடுவிக்குமாறு இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்ட எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி எம்.அபேரத்ன, மேற்படி பொலிஸ் அத்தியட்சகரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தின் பொறுப்பில் எடுக்குமாறும் பணித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .